ஷாகித் அப்ரிடி சாதனையை 92 போட்டிகளுக்கு முன்னதாகவே முறியடித்த ஷகிப் அல் ஹசன்!

Default Image

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதியது.இப்போட்டியில் முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் 124 ரன்கள் அடித்து குவித்தார்.மேலும் பல சாதனைகளை புரிந்து உள்ளார்.அதன் படி உலக்கோப்பையில் விளையாடிய முதல் 4 போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்த வீரர்களில் ஷகிப் அல் ஹசன்  இணைத்தார்.
சித்து (1987),
சச்சின் (1996),
கிரேம் ஸ்மித் (2007)
ஷகிப் (2019)
குறைந்த போட்டியில் 6000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டை வீழ்த்திய வீரர்களில் ஷகிப் அல் ஹசன் முதல்  இடம் பிடித்தார்.இப்பட்டியலில் இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 294 போட்டிகளில் விளையாடி  இந்த சாதனையை புரிந்து முதலிடத்தில் இருந்தார்.தற்போது அவரது சாதனையை ஷகிப் 202 போட்டிகளில் விளையாடி முறியடித்து முதலிடத்தில் உள்ளார்.
ஷாகிப் அல் ஹாசன் – 202 போட்டிகள்
ஷாகித் அப்ரிடி – 294 போட்டிகள்
ஜாகஸ் காலிஸ் – 296 போட்டிகள்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்