மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் பாபு மீது வழக்கு இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த பெண் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஆனால் விஜய் பாபு மீது புகார் அளித்து இத்தனை நாட்களாகியும் போலீசார் அவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…