ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பாலியல் தொழிலாளிகள்.!
கொரோனா வைரஸ் தற்போது ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாமானிய மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதுள்ளது.
அதுமட்டுமல்லமால், பாலியல் தொழில் ஈடுபடுவோர் வாழ்க்கையையும் ஊரடங்கு புரட்டி போட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக ஆப்பிரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பாலியல் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ருவாண்டாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தனது வாடிக்கையாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதனால், உணவு வாங்குவதற்கு தன்னிடம் பணம் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். உணவு சாப்பிடமால் எச்.ஐ.விக்கு மருந்து எடுக்கும் போது உடல் பலவீனம் மற்றும் குமட்டலைக் கொண்டு வரக்கூடும் என கூறினார். மேலும், மருந்து எடுத்துக் கொள்ளாதபோது அது ஆபத்தானது என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார்.
உலகில் அதிக எச்.ஐ.வி கொண்ட ஆப்பிரிக்காவில் இதே போன்ற சவால்கள் அதிகம் உள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை என்பது தினசரி மருந்துகளை உட்கொள்வதற்கு ஒரு தடையாகும் என்றும், அவற்றின் செயல்திறனைக் குறைக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.