கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ! வோட்காவை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு
கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தொடக்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.எனவே கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியை கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.இதன் விளைவாக உலக நாடுகளில் நாளடைவில் இதன் பயன்பாடு அதிகரிக்க தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகத்தான் ஜப்பான் நாட்டிலும் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆனால் ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 60 % முதல் 70 % வரை ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் ஜப்பான் சுகாதாரத்துறை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது .அதாவது கிருமி நாசினி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நேரடியாக ஆல்கஹாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.இதனால் வோட்காவை கிருமி நாசினிக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.மேலும்வோட்காவிற்கு வீரியம் அதிகம் என்பதால் அதனுடன் தண்ணீர் கலந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது ஜப்பான் சுகாதாரத்துறை.