பள்ளிப் பருவத் தேர்வுகள் திடீர் ரத்து – வெளியான அறிவிப்பு!

Published by
Edison

இலங்கை நிதி நெருக்கடி:

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடியை இலங்கை அரசு சந்தித்து வருகிறது.இதனால்,அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது.

இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.இதன் காரணமாக இலங்கையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடன் வழங்கியது.

ரூ.7,500 கோடி கடன்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை இலங்கை நிதியமைச்சர் ஸ்ரீ பசில் ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​இருதரப்பும் பரஸ்பர நலன் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அதே கூட்டத்தில், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வசதிக்காக SBI மற்றும் இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (ரூ.7,500 கோடி) கடன் கொடுக்கிறது.முன்னதாக,இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்திய உதவிகள் மற்றும் இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

தேர்வுகள் ரத்து:

இந்நிலையில்,போதிய காகித இருப்பு இல்லாத காரணத்தினால் பள்ளிப் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படவுதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை முதல் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இலங்கை கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தேர்வுக்கான வினாத் தாள்களை அச்சடிக்க தேவையான காகிதம் மற்றும் மையை இறக்குமதி செய்ய தேவையான அந்நியச் செலாவணி இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இதன்காரணமாக,கிட்டத்தட்ட 4.5 மில்லியன் இலங்கை மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago