இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது.
பொருளாதார நெருக்கடி
அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் தமிழ் மக்கள்..!
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதால் மூன்று வேளை உணவு உண்பதற்கு கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத சூழலில் மக்கள் பலர் அகதிகளாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று மட்டும் 16 இலங்கை தமிழர்கள் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேட்டியளிக்கையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாத சூழ்நிலையாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் தங்கள் இந்தியாவிற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்த நிலையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தற்போது நிலவக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…