வனுவாட்டு தீவில் கடுமையான நிலநடுக்கம்..!

Default Image

வனுவாட்டு தீவில் கடுமையான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்று வனுவாட்டு தீவு. இது ஆஸ்திரேலியாவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. வனுவாட்டு தீவில் உள்ள போர்ட் விலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் 22.9 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்