நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்..!
நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நியூலாந்தில் உள்ள கெர்மடெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருக்கிறது. மேலும், இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.