#UkraineRussiaCrisisLive:பொழியும் குண்டு மழை – பொதுமக்கள் 7 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் பல்முனை தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,உக்ரைனில் உள்ள விமான தளங்கள்,ராணுவ சொத்துக்கள் மீதே குறிவைத்துள்ளதாகவும் அதிக மக்கள் உள்ள பகுதிகள் தங்கள் இலக்கு அல்ல எனவும் ரஷ்ய ராணுவ தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய போர் விமானங்கள் மெல்லாம் பெய்த குண்டு மழையில் இதுவரை பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அரசு கூறியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலினால் 100-க்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே உக்ரைன் அரசு கூறியிருந்த நிலையில்,தற்போது லுகான்ஸ்க்,கார்கில், செர்னிஹிவ்வில் ரஷ்ய போர் விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதற்கிடையில்,உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்புவதற்கு உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்று அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.