காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவை பாயாசம் செய்து கொடுங்கள்!

காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவையை வைத்து அட்டகாசமாக பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- பால்
- நெய்
- முந்திரி
- பிளம்ஸ்
- உப்பு
- சர்க்கரை
- ஏலக்காய்
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை தேவையான அளவு எடுத்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் மற்றொரு சட்டியில் பால் எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு நீர் கலந்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும்.
லேசாக பால் கொதித்து வந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். வறுத்து வைத்துள்ள ரவையை போட்டு கிளறவும். அதன் பின் லேசாக ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு உடனடியாக அடுப்பை விட்டு கீழே இறக்கி விடவும். பின் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிளம்ஸ் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமான ரவை பாயாசம் தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025