செரீனா வில்லியம்ஸ் மைதானத்தை சேதப்படுத்தியதால் 13,500 டாலர் அபராதம் !
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் செரீனா தகுதி பெற்று உள்ளார்.கால் இறுதி போட்டியில் சக வீராங்கனையான அலிசான் ரிஸ்கி உடன் நேற்று மோதினர்.
முதல் செட்டில் செரீனா 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினர்.இரண்டாவது செட்டில் ரிஸ்கி 6-4 என்ற கணக்கில் அடித்ததால் இரண்டாவது செட் சமநிலை ஆனது. மூன்றாவது செட்டில் செரீனா ரிஸ்கியின் சர்வீஸ்களை முறியடித்து 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா அரையிறுதிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் ஏழு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் முத்தமிட்டு உள்ளார்.மேலும் பயிற்சி போட்டியின் போது ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக மீது புகார் கூறப் பட்டது. இதுதொடர்பாக விசாரணை செய்த ஆல் இங்கிலாந்து கிளப் செரீனாவிற்கு 13,500 டாலர் அபராதம் விதித்துள்ளது.