செப்டம்பர் மாதத்தை குறிவைத்து தமிழ் சினிமாவில் களம் இறங்கும் பெரிய படங்களின் லிஸ்ட் இதோ!

வரும் செப்டம்பர் மாதத்தை குறிவைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன. இதில் முதலில் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள திரைப்படம் காப்பான். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படமும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த ரேஸில், புதியதாக இணைந்து இருப்பது, கார்த்தி நடித்து வரும் ஆக்சன் படமான கைதி படம். இப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் செப்டம்பர் 27இல் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.