தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க எஸ்சிஓ நாடுகள் ஒப்புதல்….!

Published by
லீனா

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்.

துஷான்பேயில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தின் போது, ​​உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசஃப் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்திய தஜிகிஸ்தான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் மத தீவிரவாதம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் கூட்டாக பங்கேற்க இருநாட்டு ஆலோசகர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான ராட்ஸ், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நவீன உலகின் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்ப்பதில் எஸ்.சி.ஒ உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில், நம்பகமான தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, சைபர் கிரைமுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பின்னணியில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தஜிகிஸ்தான் தலைவர் எமோமலி ரஹ்மான் உரையாற்றினார். தோவல், யூசஃப் மட்டுமின்றி இந்த கூட்டத்தில் கஜகஸ்தானின் அஸ்ஸத் இசெக்கெசாவ், கிரிக் குடியரசின் மராட் இமான்குலோவ், ரஷ்யாவின் நிக்கோலாய் பத்ருஷேவ், தஜிகிஸ்தானின் சஸ்ருல்லோ முகமதுஸோடா, உஸ்பெகிஸ்தானின் போபு உஸ்மானோவ், ராட்ஸ் இயக்குநர் ஜுமாகோன் ஜியோஸோவ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்,இந்த கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை.

Published by
லீனா

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

6 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

7 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

7 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

7 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

8 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

8 hours ago