சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாகவும், திரையரங்குகளில் முதலில் வெளியிட அறிவுறுத்தியதாகவும் இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நிசப்தம் என்ற படம் ஒரு திரில்லர் கலந்த படமாகும். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தை தெலுங்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியா னதை படத்தின் இயக்குனர் திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் நிசப்தம் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் வழங்கி சென்சார் ஆகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து முதலில் இந்த படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாகவும், திரையரங்குகளில் முதலில் வெளியிட அறிவுறுத்தியதாகவும் இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…