முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.!
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் – மே மாத செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்கள் முன் எழுதிய தேர்வுகளின் மதிப்பெண்களையும் , உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அரசின் தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன் வெளியிடப்படும் என்றும், விரைவில் இறுதி ஆண்டு படித்திருந்த மாணவர்களுக்கான தேர்வுகள் விரைவில் நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.