சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை இயக்குனர் செல்வராகவன் தொடங்கியுள்ளார்.
தமில் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவர் 2 போன்ற படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில், ஹீரோவாகவும் சாணிக்காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று இயக்குனர் செல்வராகவன் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். விரைவில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…