திரைக்கதை எழுத தொடங்கிய செல்வராகவன்! புதுப்பேட்டை-2 வா ரசிகர்கள் கேள்வி!?
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் படமெடுத்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தை விட, சில ஆண்டுகள் கழித்து கொண்டாடப்படுகின்றன. அப்படி அவர் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் கொண்டாடப்பட்டன. கடைசியாக வெளியாக என்.ஜி.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சரியான வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் மீண்டும் செல்வராகவன் தனது தம்பியை வைத்து புது படம் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தான் தயாரிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து,
தந்து டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன், ‘ திரைக்கதை எழுதும் பணி தொடங்கியது. என பதிவிட்டு ஒரு லேப்டாப் புகைப்படத்தையும் அதனருகில் ஒரு புத்தர் சிலையும் உள்ளது போல ஒரு பதிவை இட்டுள்ளார். அதற்கு கிழே ரசிகர்கள் இது புதுப்பேட்டை 2வா,இல்லை ஆயிரத்தில் ஒருவன் 2வா என கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
Screenplay Writing…no greater pleasure !! Absolute peace ???????????????? pic.twitter.com/LVNysgcXgm
— selvaraghavan (@selvaraghavan) November 6, 2019