இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஓருவன் 2 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். படத்திற்க்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்திருந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலுமே தற்பொழுது ஓரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அது போல செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கான இரண்டாம் பக்கத்தையும் ரசிகர்கள் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது குறித்து செல்வராகவனிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இந்நிலையில் புத்தாண்டில் இயக்குனர் செல்வராகவன் காத்திருந்த ரசிகர்களுக்காக ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனுஷின் ட்விட்டர் கணக்கை இணைத்து ஆயிரத்தில் ஓருவன் 2 படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதே சமயம் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்புக்கு ஒருவருடம் எனவும், 2024 இல் வருகிறான் இளவரசன் எனவும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷ் தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது, இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…