ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.
இந்த ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பது யார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியதில் ஒருபுறம் ஜிவி பிரகாஷ் என்றும் மற்றோரு பக்கம் யுவன் ஷங்கர் ராஜா என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவா அல்லது ஜிவி பிரகாஷா என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வராகவன் ” இரண்டு பேருமே எனது இரண்டு கண்கள் எனக்கு இருவரும் மிகசிறந்த நண்பர்கள். படத்திற்காக நேரம் ஒதுக்கவேண்டும் மேலும் வரும் நேரம் அதைத்தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…