டிராப்பான படத்தை மீண்டும் தொடங்க இணையும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி.!
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர். இவரது இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என். ஜி. கே உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையில் அவர் இயக்கிய படமான எஸ். ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை, சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி ஆகிய படங்களின் பணிகள் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதுப்பேட்டை 2 படத்தினை இயக்கும் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இதில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மன்னவன் வந்தானடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிப்பதாக கூறி தயாரிப்பாளர் ஒருவர் முன் வந்துள்ளதாகவும், எனவே இந்த படத்தை மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.