செல்வராகவன் – கீர்த்தி சுரேஷின் “சாணிக்காயிதம்” எப்போது வெளியீடு.?! வெளியான சூப்பர் தகவல்.!

Published by
பால முருகன்

ராக்கி படத்தை இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

கடந்த ஆண்டே இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சாணி காயிதம் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இப்படம் வரும் 25-ஆம் தேதி அல்லது ஏப்ரல் 1-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கும் திரைப்படமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது அவர் நடிக்கும் முதல் திரைப்படம் கண்டிப்பாக கதை அருமையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

12 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

37 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

50 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago