செல்வராகவன் அற்புதமான நடிகர் – அருண் மாதேஸ்வரன் ட்வீட்..!!

செல்வராகவன் சார் ஒரு சிறந்த நடிகர் ஒவ்வொரு நடிகரும் சிறந்த நடிகர் என்றாலும் அவர் மிகவும் அற்புதமான நடிகர் என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவன் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார். ஆம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தி செல்வராகவனிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவனை புகழ்ந்து சில விஷயங்களை கூறியுள்ளார். இதில் அவர் தெரிவித்திருப்பது “செல்வராகவன் சார் ஒரு சிறந்த நடிகர் ஒவ்வொரு நடிகரும் சிறந்த நடிகர் என்றாலும் அவர் மிகவும் அற்புதமான நடிகர் என்று ட்வீட் செய்துள்ளார்.
Selva sir the actor, ???????????????????? common notion is that every director is a good actor but in Selva sir’s case, he’s a brilliant actor!! @selvaraghavan pic.twitter.com/P33y4iZpAo
— Arun Matheswaran (@arunmatheswaran) March 18, 2021