ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் ‘அண்ணாத்தேசேதி’.!
விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அண்ணாத்தேசேதி’ என்ற பாடல் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான அண்ணாத்தேசேதி என்ற பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
#1MillionViewsforAnnatheSethi ????
It’s a MILLION already for #AnnatheSethi ????????
▶️ https://t.co/NWiSSNkz81A @govind_vasantha Musical @VijaySethuOffl @DDeenadayaln @7screenstudio@Lalit_SevenScr @rparthiepan @aditiraohydari@mohan_manjima @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/iuPqCX1mqm
— SS Music (@SSMusicTweet) August 3, 2020