தனுஷிற்கு வில்லனாகும் மக்கள் செல்வன்.?

Default Image

இந்த படத்தில் தனுஷிற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படமும் மாமனிதன் படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 இந்த நிலையில் இமைக்க நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் அனுராக் காஷ்யப் தற்பொழுது நடிகர் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் எனவும் கூறப்படுகிறது, மேலும் முக்கியமான தகவல் இந்த படத்தில் தனுஷிற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்