செல்பி புகழ் கொரில்லா.., தனது பாதுகாவலரின் மடியில் உயிரை பிரிந்தது..!
கடந்த 2019-ம் ஆண்டு செல்பி புகைப்படம் மூலம் வைரலான நடாகாஷி கொரில்லா உயிரிழந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு காங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலாக காரணம் கொரில்லா குரங்கு பாதுகாவலர் ஒருவர் செல்ஃபீ எடுக்க அதற்கு கொரில்லா குரங்குகள் போஸ் கொடுத்தது தான், இதனால் அந்த புகைப்படம் உலக அளவில் வைரலானது. இந்த புகைப்படம் காங்கோ நாட்டில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது.
Sharing again, selfie of the century, a ranger and friends at Virunga National Park in DR Congo. On #WorldRangerDay pic.twitter.com/Kp3BCkCHCS
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 31, 2020
வைரலான இரண்டு குரங்குகளின் பெயர் நடாகாசி, மாட்டாபிஸி. இதில் 14-வயதான நடாகாசி என்ற குரங்கு கடந்த செப் 26-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த செய்தியை விருங்கா தேசிய பூங்கா வெளியிட்டுள்ளது. கொரில்லா குரங்குகளுடன் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட வன பாதுகாவலரும், பராமரிப்பாளருமான மேத்யூ ஷவாமு-வின் மடியிலேயே நடாகாஷி தனது இறுதி மூச்சை விட்டது.
இந்த செய்தி அறிந்த பலர் அதிர்ச்சியந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
It is with heartfelt sadness that Virunga announces the death of beloved orphaned mountain gorilla, Ndakasi.
C’est avec une profonde tristese que Virunga annonce le décès du gorille de montagne orpheliné Ndakasi.https://t.co/GdkJbhWESz pic.twitter.com/bsCKdEq8tB
— Virunga NationalPark (@gorillacd) October 5, 2021