நமக்கு வைத்துள்ள செய்வினையை கண்டறிவது எப்படி? அதனை தவிர்ப்பது எப்படி?
- போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நமது முன்னேற்றத்தை தடுக்க வைக்கப்படும் மாந்தீரிக செயல்தான் செய்வினை.
- இந்த செய்வினையை தவிர்க்க துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்தால் நம் வாழ்வு சரியாகிவிடும்.
இந்த உலகம் மிகவும் போட்டி நிறைந்தது. அதில் ஒருவர் முன்னேறுவதற்கு எந்த அளவுக்கு வழி தேடுகிறார்களோ, அதே அளவுக்கு ஒருவரின் முன்னேற்ற தடுக்கவும் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். அதில் முக்கியமானது செய்வினை. இந்த செய்வினையானது நமது ஜாதகம் நன்றாக இருந்தாலும் நல்ல நேரம் கூடி வந்தாலும் எந்த நல்ல காரியத்தையும் நம்மால் செய்ய முடியாது. அப்படிப்பட்ட செய்வினையை எப்படி கண்டறிவது என தற்போது பார்க்கலாம்.
ஒருவர் நமக்கு செய்வினை வைத்திருந்தால், நமது தலை வலிக்கும். உண்ணும் உணவு வயிற்றில் தங்காது. உடல்நலம் சோர்வாக காணப்படும். வீட்டில் எந்தவித நல்ல காரியமும் செய்ய முடியாது. கடவுளை வணங்க முடியாது. குலதெய்வ வழிபாட்டிற்கு பயணம் செய்ய முடியாது. உடல்நலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். ஆனால், மருத்துவரிடம் சென்றாலும் அது சரியாகாது. இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு யாரோ செய்வினை வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க எந்த வித மாந்திரீக செயலையும் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் பணம்தான் வீணாகும். தவிர அந்த செய்வினை தீராது. முறையாக உங்கள் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொண்டு போய் கொடுத்து அவர் என்ன கூறுகிறாரோ அந்த பரிகாரத்தை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் துர்கை அம்மனை பூஜை செய்யுங்கள்.
துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்ய வேண்டும். அதாவது, துர்க்கை அம்மன் படத்தை பூஜை அறையில் வைத்து தண்ணீரிலோ அல்லது பன்னீரிலோ குங்குமத்தை கரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து இருக்க வேண்டும். பின் உதிரி பூக்களை ஒரு தட்டில் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 108 துர்க்கை அம்மன் துதிகளை கூறி இந்த பூக்களை எடுத்து குங்குமம் கலந்த தண்ணீரில் நனைத்து துர்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். 108 துதிகள் தெரியாதவர்கள் ஓம் துர்க்கை அம்மன் போற்றி என்ற மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். இதனை தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை செய்யலாம். தினமும் செய்ய முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது இதனை செய்யலாம். இந்த பூஜையை செய்து துர்க்கை அம்மனை வணங்கினால் நமக்கு வைத்திருக்கும் செய்வினைகள் தவிடுபொடியாகும்.