ஜிவி பிரகாஷ் – சீனு ராம சாமி இணையும் படத்திற்கு இடிமுழக்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை காயத்ரி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநாதன் இசையமைத்து வருகிறார். இயக்குனர் சீனு ராமசாமி தனது பாணியை மாற்றியுள்ளார். அவர் எப்போதும், கிராமத்து பின்னணியில் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக கதை சொல்லிவிடுவார். ஆனால்,தற்போது ஜி.வி.பிரகாஷ் படத்திற்காக தனது பாணியை மாற்றியுள்ளார்.
இப்படம் ஆக்சன் கதைக்களமாக உருவாக்கிவருகிறதாம். இப்படத்திற்கு இடிமுழக்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான டைட்டில் போஸ்டர்ரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…