அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷம் திருமணம் – தாய்லாந்து மன்னருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Default Image

அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷமே திருமணம் செய்துகொள்ளும் தாய்லாந்து மன்னருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையிலும் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய நபர் தான் பிரதமராக அல்லது முதல்வராக நாட்டை ஆளுகை செய்கின்றனர். இது மக்களாட்சி ஆனால் மக்களாட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஓமன், தாய்லாந்து, சவுதி அரேபியா, சூடான் ஆகிய பல்வேறு நாடுகளில் முடியாட்சி என அழைக்கப்படக்கூடிய மன்னர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து நாட்டில் தற்போது நடைபெறக்கூடிய மன்னரின் ஆட்சி கொடும் மோசமானதாக இருப்பதாக நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் மன்னரை விமர்சித்தாலே அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளதாம். பழங்கால மன்னர்கள் போல தாய்லாந்து மன்னர் தற்போது ஆட்சி செய்கிறாராம்.

அதாவது, பொறுப்பு முழுவதையும் மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு மக்களின் வரி பணத்தை வைத்து எந்நேரத்திலும் எப்பொழுதும் அந்தபுரத்தில் அழகிகளுடன் மது அருந்திவிட்டு கும்மாலம் போடுவது தான் இவரது வேலையாம். இவருக்கு 30 பில்லியன் பவுன்ட் சொத்து இருப்பதுடன் நான்கு மனைவிகளும் சில செல்லப் பிராணிகளும் உள்ளது.

தாய்லாந்தில் மன்னரை தான் கடவுளாக வணங்கி வந்தனர். ஆனால், தற்போது ஆட்சி புரியக்கூடிய மன்னர் மஹா வஜிரலோங்கார்ன் மிக மோசமானவராக இருப்பதுடன் அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால் உடனடியாக அவரை திருமணம் செய்து ராணி ஆக மாற்றி விடுவாராம்.

இந்நிலையில், இவரது ஆட்சி பிடிக்கவில்லை எனவே புதிய அரசியல் சாசனம் வேண்டும் எனவும் மன்னரின் உரிமைகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தற்போது தாய்லாந்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்