அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வைலட் கதிர்களை காட்டினால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா என்பதை சோதித்து பார்த்தால் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெப்பத்தால் கொரோனா வைரஸ் தீவிரம் குறைகிறது என்றால் ஒளியை பாய்ச்சி கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அதாவது, சூரிய வெப்பம் இருக்குமிடத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பாதியாக குறைவதாக அமெரிக்காவின் தேசிய பகுப்பாய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ் சூரிய ஒளி பட்டதும் ஒன்றரை நிமிடங்களில் அழிந்துவிடுவதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வைலட் கதிர்களை காட்டினால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா என்பதை சோதித்து பார்த்தால் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். அதுபோல கிருமிநாசினி கொரோனா வைரஸை அழித்துவிடுகிறது என கேள்விப்பட்டதாக கூறிய ட்ரம்ப், இதனால் கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்ய முடியுமா என நகைச்சுவையாக பேசினார். அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சு ஆபத்தானது என்றும் விச்சித்திரமானது எனவும் மருத்துவர்கள் சிலர் விமர்சித்தியுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. தலைநகர் வாஷிங்டனில் ட்ரம்ப் ஹோட்டல் முன்பாக இறந்தவர் உடலை வைக்கும் பிளாஸ்டிக் பைகளை வரிசையாக வைத்த போராட்டக்காரர்கள் ட்ரம்பை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில், இந்த பிரச்சனையை சரியாக கையாளுவது இல்லை என கூறி, அதிபர் ட்ரம்ப் பதிவு விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…