இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்.
இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்களது மரணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத்தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தருகிறது. மூவரது இழப்பினால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், படக்குழுவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.
இவ்விபத்தில் தனது மருமகன் கிருஷ்ணாவை இழந்து நிற்கும் மதிப்பிற்குரிய கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுக்கு என் ஆறுதல்கள். இனிவரும் காலங்களில் படப்பிடிப்புத்தளங்களில் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுவே கடைசி விபத்தாக இருக்க வேண்டும் என்றும் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…