உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அலறி ஓடுகின்றனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். 9,172 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கொரோனா அந்நாட்டில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட இத்தாலியின் 6 கோடி மக்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்படுகின்றன. இதற்காக புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வரும் 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இதனிடையே எதாவது அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். இதைத் தவிர்த்து மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு கட்டுப்பாடு சட்டத்தை மீறினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட அபராதங்கள் விதிக்கப்படும். பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான தனியார், அரசு, எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி கிடையாது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்படுகிறது. ஆனால் கொரானா தடுப்பு நிலையங்கள் மட்டும் திறந்திருக்கும். உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்டவை திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுகாதாரப் ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…