இத்தாலி முழுவதும் சீல் வைப்பு.! மீறுவோருக்கு சிறைத்தண்டனை பிரதமர் அறிவிப்பு.!

Default Image

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அலறி ஓடுகின்றனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். 9,172 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  கொரோனா அந்நாட்டில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட இத்தாலியின் 6 கோடி மக்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்படுகின்றன. இதற்காக புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வரும் 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

இதனிடையே எதாவது அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். இதைத் தவிர்த்து மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு கட்டுப்பாடு சட்டத்தை மீறினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட அபராதங்கள் விதிக்கப்படும். பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான தனியார், அரசு, எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி கிடையாது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்படுகிறது. ஆனால் கொரானா தடுப்பு நிலையங்கள் மட்டும் திறந்திருக்கும். உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்டவை திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுகாதாரப் ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்