மெக்ஸிகோவில் வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்த கடல் நீர் ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
மெக்ஸிகோவில் ஏற்பட்ட புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. மெக்ஸிகோ மாநகரில் பஜா கலிபோர்னியா எனும் தீபகற்ப பகுதியில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மெக்ஸிகோ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் புயலில் சிக்கி யாரும் உயிழந்ததாகவோ அல்லது காயமடைந்ததாகவோ இது வரை எந்த தகவலும் வர வில்லை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.