எகிப்தில் ஒரு ஸ்கூபா மூழ்காளர் ஆறு நாட்கள் நீருக்கடியில் இருந்து ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். சதாம் அல் கிலானி நவம்பர் 5 ஆம் தேதி அன்று தஹாப் கடற்கரையில் நீருக்கடியில் சென்று 145 மணி 30 நிமிடங்கள்(அதாவது 6 நாள்கள்) கழித்து வெளியே வந்தார்.
2016 ஆம் ஆண்டில் சைப்ரஸில் செம் கராபே என்பவர் 142 மணி 74 நிமிடங்கள் நீருக்கடியில் இருந்தார். அதுவே தற்போதைய உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சதாம் முறியடித்துள்ளார். 145 மணிநேரத்திற்கு அதிகமாக நீருக்கடியில்சதாம் இருந்தாலும் கின்னஸ் உலக சாதனையாக இன்னும் மாற்றவில்லை.
முதலில் 150 மணி நேரம் நீருக்கடியில் இருக்க திட்டமிட்டிருந்தார், இருப்பினும், உடல்நலக் கவலைகள் காரணமாக நான்கரை மணி நேரத்திற்கு முன்பே அவர் நீருக்கடியில் இருந்து அவர் வெளியே வந்தார். சதாம் ஒரு நீச்சல் குளத்தில் தன் சோதனைகளை மேற்கொண்டார்.
நீருக்கடியில் சதாம் இருந்த பொது பல சிக்கல்கள் இருந்தாலும், அவர் சாதாரணமாக எல்லாவற்றையும் செய்தார், ஆனால் நீருக்கடியில் தூக்கம் மற்றும் சுவாசம் பற்றி கேட்டபோது, தூங்கும் போது முழு முகமூடியைப் பயன்படுத்துவதால் அது எளிதாகிறது என்று கூறினார்.
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…