தமிழ் சினிமாவில் முக்கிய திரை நட்சத்திரமாக திகள்பவர் தல அஜித்குமார். தமிழில் அமராவதியில் அறிமுகமாகி கடைசியாக நேர்கொண்ட பார்வை எனும் திரைப்படம் வரையில் அஜித் திரை பயணத்தில் கடந்து வந்த திரைப்படங்களை பற்றி சிறிய தொகுப்பு…
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இவர் ரசிகர்களால் அல்டிமேட் ஷ்டார் என்றும், தல என்றும் அழைப்பதுண்டு. இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பதாக, விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பின் 1992-ல் பிரேமம் புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.
இந்த படத்திற்க்கு பின்னர் தான், தமிழ் சினிமாவில் முதன்முதலாக அமராவதி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படமான அமராவதி வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில், பாசமலர், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த இந்த படங்களில், பவித்ரா என்ற திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கன படமாக அமைந்தது. நடிகர் அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 1995-ம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, முகவரி என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடித்து வந்த காலத்தில் 2003 – 2005-ஆம் ஆண்டிற்குள் 8 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களில் வில்லன், அட்டகாசம் திரைப்படங்கள் மட்டுமே வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றன.
அதனை தொடர்ந்து பில்லா, மங்காத்தா என ஹிட் கொடுத்து, சமீபத்திய படங்களான ஆரம்பம், வீரம், வேதாளம் என ஹிட் கொடுத்தார்ர். வீரம் , வேதாளம் ஹிட் கொடுத்த இயக்குனர் சிவாவுடன் 2017-ம் ஆண்டு மீண்டும் இணைந்த விவேகம் கலவையான விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டபோது,
மீண்டும், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்தார். அப்படம்சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் வெளியானாலும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து, தீரன் பட இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட ப்பார்வை என்ற படத்தில் நடித்தார். அப்படமும் ரசிர்கர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு திரைக்கு வருவது சந்தேகம் என கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…