2 நாளில் ரூ.1,100 கோடிக்கு ஸ்கூட்டர்கள் விற்பனை – ஓலா நிறுவனம் அறிவிப்பு..!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியது.
ஓலா குழும தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இன்று தனது ட்விட்டரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியதாகவும், இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய உற்சாகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று அவர் கூறினார்.
ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை கடந்த புதன்கிழமை விற்கத் தொடங்கியது. இதில் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. நிறுவனம் முதல் நாளில் ரூ .600 கோடி மதிப்புள்ள ஸ்கூட்டர்களை விற்றது. இரண்டு நாட்களில் விற்பனை 1100 கோடி ரூபாயை தாண்டியது என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி விற்பனை தொடங்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய 2 மாடல் மின் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. நேற்று முன்தினம் ரூ.600 கோடிக்கும், நேற்று ரூ.500 கோடிக்கும் ஓலா மின் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளது. ஓலா மின் ஸ்கூட்டர் வாங்க பதிவுக்கட்டணம் ரூ.499-ம் முன்பணமாக ரூ.20,000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Day 2 of EV era was even better than Day 1! Crossed ₹1100Cr in sales in 2 days! Purchase window will reopen on Nov 1 so reserve now if you haven’t already.
Thank you India for the love & trust. You are the revolution! https://t.co/oeYPc4fv4M pic.twitter.com/fTTmcFgKfR
— Bhavish Aggarwal (@bhash) September 17, 2021