இதை செய்யவில்லை என்றால் உலகம் அழிந்து விடும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
இன்று உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் இயற்கையை சார்ந்து வாழும் உயிரினங்களை, மனிதன் தனது சுயநலத்திற்காக அளித்து வருகிறான். இந்த இயற்கையையோ அல்லாது இயற்கையை சார்ந்த உயிரினங்களை அளிப்பது, நமது வாழ்வாதாரத்தை தான் பாதிக்கும் என்பதை, உயிரினங்களை அழிக்கும் எந்த மனிதர்களும் உணருவதில்லை.
இந்நிலையில், புதிய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதிலும் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் பூச்சிகள், தேனீக்கள் அழிந்து வருவதாக தெரிகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், அதிக அளவு விவசாய நிலங்களும், பூச்சிகொல்லி ரசாயனமும் தான் என கூறப்படுகிறது.
இந்த உயிரினங்களின் அழிவு சுற்றுசூழலில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அழிவின் தொடக்கம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.