எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி ஒரு கர்ப்பிணி பெண், ஆண் பாதிரியார் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போலந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு பண்டைய எகிப்திய மம்மியை ஆராய்ச்சி செய்த்துள்ளனர்.அந்த ஆராய்ச்சியில் எக்ஸ்-கதிர்கள் மற்றும் கணினி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை அவர்களுக்கு தந்துள்ளது.
ஏன்னென்றால்,இந்த பண்டைய எகிப்திய மம்மி ஒரு ஆண் பாதிரியார் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஒரு பெண் என்றும் அதிலும் அவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இதுதான் உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் மம்மி என்று கூறினர்.
போலந்து தலைநகர் வார்சாவில் 1826 இல் இந்த மம்மி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த கல்வெட்டில் இது ஒரு ஆண் பாதிரியார் என்றும் இருந்துள்ளது. தற்போது, அது ஆண் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
ஏன்னென்றால், அதில் ஆண்குறி இல்லை எனவும் அதற்கு பதிலாக மார்பகங்களும், நீண்ட கூந்தலும் இருந்தது எனவும் மேலும் அது ஒரு கர்ப்பிணி பெண் என்றும் மானுடவியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான மார்செனா தெரிவித்துள்ளார்.
அதில் அவர், சிறிய பாதத்தையும் சிறிய கருவையும் பார்த்தோம்.மேலும்,அந்த மம்மியின் வயது 20 முதல் 30 இருக்கும் என்றும் கணித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அந்த கருவில் இருந்த மண்டையோட்டின் அளவு 26 முதல் 28 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வார்சா மம்மி திட்டத்திலிருந்து ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு மற்றும் வார்சாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள பிற மம்மிகள் பற்றிய பல ஆண்டு சோதனைகள் இந்த வாரம் தொல்பொருள் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. மேலும், போலந்து அகாடமி ஆப் சயின்ஸின் குழு உறுப்பினர் வோஜ்சீச் எஜ்மண்ட் ஏ.பி இது எங்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு மற்றும் ஆச்சர்யம் என்று கூறியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…