கொரோனா வைரஸின் 6 வகையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
கொரோனா வைரஸின் 6 வகையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலக நடுகல் அனைத்தையும் உலுக்கி வருகிறது.இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸிற்கான 6 வகையை கண்டுபிடித்துள்ளனர்,இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக காய்ச்சல் ,இருமல் உள்ளிட்டவை இருந்தாலும் வயிற்றுப்போக்கு,தலைவலி ,சோர்வு உள்ளிட்ட சில அறிகுறிகளை கொரோனா பாதித்தவர்களிடம் கண்டுபிடித்துள்ளனர்.
- காய்ச்சல் இல்லாமல் தலைவலி,தசை வலி,இருமல்,வாசனை இழப்பு ,தொண்டைப் புண், நெஞ்சுவலி மற்றும் இருமல் உள்ளிட்டவை முதல் வகை ஆகும்.
- காய்ச்சலுடன் தலைவலி,இருமல் ,தொண்டை புண்,வாசனை இழப்பு ,பசியின்மை உள்ளிட்டவை 2-வது வகை ஆகும்.
- ஏற்கனவே கொரோனா அறிகுறிகள் இருக்கும் நிலையில் அவற்றுடன் பசியின்மையுடன் வயிற்றுப்போக்கு இருப்பது 3-வது வகை ஆகும்.
- மேற்கூறிய அறிகுறிகளுடன் உடல் சோர்வு ஏற்படுவது 4- வது வகை ஆகும்.இது கடுமையான நிலை ஆகும்.
- 2-வது வகையில் உள்ள பழைய அறிகுறிகளுடன் மனக்குழப்பம் ஏற்படுவது 5-வது வகை.இதுவும் கடுமையான நிலை ஆகும்.
- 3-வது வகையுடன் உள்ள அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல்,வயிற்றுவலி,பசியின்மை ,மனக்குழப்பம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை 6 -வது வகை ஆகும்.இது மிகவும் கடுமையான நிலை என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள்.