பிரெஞ்சு நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரெஞ்சு நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுச்செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மட்டும் 4,771பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த வாரத்தில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரான்சின் தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளை திறந்தால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இயலாது என்பதால் ஜனாதிபதியின் இந்த முடிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர் சங்கம் ஒன்று பள்ளி திறப்பதற்கான முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…