#BREAKING: பள்ளிகள் திறப்பு….ஜனவரி 08-வரை கருத்து கேட்பு..!
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு வரும் 8-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்படும் இந்த கருத்து கேட்பு கூட்டம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் வெவ்வேறு நாட்கள் இடைவெளி விட்டு கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளளது. கடந்த நவம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்து இருந்த நிலையில், கடந்த மாதம் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இந்த சூழலில் பள்ளிகள் திறக்கவேண்டாம் என கூறிய நிலையில், அந்த திட்டதை தமிழக அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.