பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் நைஜீரியாவில் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள்!
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகளால் பள்ளி மாணவர்கள் பிணைக்கைதிகளாக கடத்தப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், நைஜீரியா கெப்பி மாகாணத்திலுள்ள 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை கடத்தி சென்று தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் நைஜீரியாவில் மற்ற பிற பயங்கரவாத ஆயுதக் குழுக்களும் பள்ளி மாணவிகளை கடத்தி பிணை கைதிகளாக வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் மூலமாக தங்களுக்கு தேவையானவற்றை செய்துகொள்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நைஜீரியாவிஉள்ள பள்ளிக்கூடங்களில் புகுந்து பயங்கரவாதிகள் மாணவிகளை கடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் நைஜீரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கெப்பி மாகாணத்தில் தற்போது பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் நிலை மாற்றும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு கெப்பி மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மாகாணத்தில் உள்ள ஏழு பள்ளிக்கூடங்கள் தற்பொழுது பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் மூடப்பட்டுள்ளன. மேலும் சில பள்ளிக்கூடங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.