அமெரிக்காவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு..! 3 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் சமீப காலமாகவே பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கமாகி வருகிறது. இதனையடுத்து துப்பாக்கியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.