எஸ்.பி.பி-க்கு விரைவில் மணிமண்டபம்.! அறிவிப்பை வெளியிட்ட எஸ்.பி.பி சரண்.!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என எஸ்.பி.பியின் மகன் சரண் பேட்டி
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை 4மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்பிபி ஒருவரே.
இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த்து ஓராண்டு ஆகிவிட்டதையொட்டி ரசிகர்கள் மற்றும், திரையுலக பிரபலங்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், முதலாம் ஆண்டு நினைவு நாளை திரை இசை கலைஞர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜா, எஸ்பிபி சரண் மற்றும் பின்னனி பாடகர் சுரேந்தர், தினா, செல்வமணி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின் பேசிய எஸ்பிபி சரண் “எஸ்.பி.பி-க்கு மணிமண்டபம் கட்ட அரசின் உதவி கேட்டு இருக்கிறோம்.. யார் வேண்டுமானாலும் உதவலாம் எஸ்.பி.பி-யின் மணிமண்டபம் கட்டி முடிக்க ஓராண்டாகும்.. கொரோனா காலகட்டத்தால் அப்பா நினைவிடத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை மன்னிக்கவும்” என தெரிவித்துள்ளார்.