ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: எஸ்பிஐ கிளார்க் 2021 தேர்வுக்கு 5454 ஜூனியர் அசோசியேட் காலியிடங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி : ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழக பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி: விண்ணப்பங்கள் 27.04.2021 (இன்று ) முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளன.ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதி 17.05.2021 ஆகும்.
வயது வரம்பு : விண்ணப்பதார்கள் 01.04.2021 அன்றைய தேதியில் குறைந்த பட்சமாக 20 வயது நிரம்பியிருக்க வேண்டும்.மேலும் அதிகபட்சமாக 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி: முதல்நிலை தேர்வு(Preliminary examination) ஜூன் மாதத்தில் நடைபெறும்.அதே போன்று,மெயின் தேர்வு(main examination) 31.07.2021 அன்று நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும்.SC/ST/OBC/PWD போன்ற இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனிலேயே செலுத்தப்பட வேண்டும்.ஒரு முறை செலுத்தப்பட்ட கட்டணம் எந்தவொரு முறையிலும் திருப்பித் தரப்படமாட்டாது அல்லது வேறு எந்த தேர்வுக்கும் முன்பதிவு செய்ய முடியாது.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் www.sbi.co.in/careers அல்லது https://ibpsonline.ibps.in/sbijascapr21/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…