இன்னும் எஸ்.பி.ஜனநாதனின் மரண வடு மறையவில்லை…! இரண்டே நாளில் அவரது வீட்டில் நிகழ்ந்த மற்றோரு சோக சம்பவம்…!
எஸ்.பி.ஜனநாதனின் மரண வடு மறையாத நிலையில், அவரது தங்கை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தமிழ் சினிமாவில் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமே தேசிய விருதை பெற்றது. இதனை தொடர்ந்து, பேராண்மை, ஈ, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது மக்கள் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று நிலையில், மார்ச் 11ஆம் தேதி இயக்குனர் ஜனநாதன் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, மார்ச் 14-ஆம் தேதி காலை ஜனநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணம் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், அவரது தங்கையான லட்சுமி, அண்ணன் மறைவை தாங்க இயலாமல், கடந்த இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது ஜனநாதனின் வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.