எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது.!
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரியவந்தது, மேலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டிருந் ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதனால் அவர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இதனால் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் எஸ்.பி.பாலசுப்பிர மணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.