#SAvsAUS | 2nd Semi-Final : தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 212 ரன்கள்..!
SAvsAUS: டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மோதும், ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
நடப்புத் தொடரில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 லீக் போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தற்போது, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்களும், டிராவிஸ் ஹெட் 47 ரன்களும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் இருவரும் தலா3 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
தென்னாப்பிரிக்கா
குயின்டன் டி காக்(W), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி
ஆஸ்திரேலியா
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(w), பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்