அரசுக்கு எதிராக செயல்படுவதாக சவுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பெண்மணிக்கு ஹத்லோல் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி பிரபலமானவர் தான் சவுதி அரேபியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹத்லோல். இந்நிலையில், இவர் சவுதிக்கு எதிராக செயல்படுவதாகவும் வெளிநாடுகளின் தவறான போக்குகளுக்கு ஆதரவளிப்பதாகவும் எழுந்த சந்தேகத்தின் பேரில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் அவருக்கு தீர்ப்பு வழங்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் வரை அவர் சிறையிலேயே கழித்து விட்டார். இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தில் இவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதம் இவருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் இரண்டு ஆண்டுகள் பத்து மாதம் சிறையில் இருந்து உள்ளதால், அந்த நாட்களை கழித்து மீதமுள்ள நாட்கள் சிறையில் இருக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அவரது குடும்பம் மிகவும் கண்டித்ததுடன் அவரது சகோதரி இது குறித்து மேல் மறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் இது மனித உரிமைக்கு எதிரான அநீதி என கூறியுள்ளார். தீர்ப்பால் அமெரிக்காவுக்கும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…