பெண்கள் பர்தா அணிவது கட்டாயமில்லை உடைகளை அவர்களே தீர்மானிக்கலாம்,முன்பிருந்த கட்டுபாடுகளை தளர்த்தி சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவிப்பு
சவூதியில் பெண்கள் உடல் முழுவதும் மறைக்கும் பர்தா அணிவது கட்டாயமில்லை என சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் முன்பிருந்த கட்டுபாடுகள் அனைத்தையும் தளர்த்தி அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் ஆண்களைப்போலவே பெண்களும் மதிப்புக்குரிய வகையில் உடை அணிய வேண்டும்என்பதே முஸ்லீம் சரியத் குறிப்பிடுகிறது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை அவர் தெரிவித்துள்ளார்.பெண்கள் அணியும் மதிப்புக்குரிய உடை எது என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அது கருப்பு அங்கியான பர்தாவா தான் இருக்கவேண்டும் என்று எங்கேயும் கூறப்பிடவில்லை. மரியாதை பெறத்தக்க ஆடை எதுவென்றாலும் அதைத் தேர்வு செய்வதற்கான முழு சுதந்திரமும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆண்-பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும் எனக்கூறிய இளவரசர் மேலும் சவூதியில் வாழும் பெண்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்படவில்லை எனவும், இஸ்லாம் அனுமதிக்கும் சில உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆண்களும் பெண்களும் இணைந்து செல்வதை அனுமதிக்காத தீவிரவாதிகள் நமது சவூதியில் உண்டு. ஆணும் பெண்ணும் தனியாக ஓரிடத்தில் தங்குவதையும், பணியிடத்தில் ஒன்றாகவேலை செய்வதையும் வேறுபடுத்திப்பார்க்க அவர்களால் முடியவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அணு ஆயுத நாடாகசவூதி அரேபியாவை மாற்ற விரும்பவில்லை. ஆனால், ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் சவூதிஅரேபியாவும் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும். ஈரானின் நடவடிக்கைகள் அனைத்தும் தேசநலனுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள உறவைசிதைக்கும் நோக்கத்துடன் செப் டம்பர் 11 தாக்குதலுக்காக 15 சவூதிகளை ஒசாமா பின்லேடன் பயன்படுத்தியதாகவும் அவர் அளித்தநீண்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.